உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 320 கிலோ புகையிலை பறிமுதல் கடத்திய 3 பேர் சுற்றிவளைப்பு

320 கிலோ புகையிலை பறிமுதல் கடத்திய 3 பேர் சுற்றிவளைப்பு

சேலம்:சேலம், செவ்வாய்ப்பேட்டை போலீசார், அங்குள்ள அருணாசல தெரு, நெய்மண்டியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த, 'டாடா இண்டிகா' காரை நிறுத்தும்படி, 'சைகை' காட்டினர்.ஆனால் நிறுத்தாமல் சென்றதால், போலீசார் அவர்களை சற்று துாரம் விரட்டிச்சென்று காரை சுற்றிவளைத்தனர். தொடர்ந்து சோதனை செய்தபோது, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. காரில் இருந்த, 3 பேரிடம் விசாரித்தபோது, நெத்திமேட்டை சேர்ந்த மோகன், 25, மணியனுார் மாரிசெல்வம், 27. சூரமங்கலம் இம்ரான், 30, என்பதும், பெங்களூருவில் இருந்து, 320 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி சேலம் மாநகரில் விற்க கொண்டு வந்ததும் தெரிந்தது. இதனால், 3 பேரையும் கைது செய்த போலீசார், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை