உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கணவன் கொலை கள்ளக்காதலுக்காக நாடகமாடிய மனைவி உள்பட 3 பேர் கைது

கணவன் கொலை கள்ளக்காதலுக்காக நாடகமாடிய மனைவி உள்பட 3 பேர் கைது

எருமப்பட்டி, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், மது வாங்கி குடிக்க வைத்து கணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, நாடகமாடிய மனைவி உள்பட, மூவரை போலீசார் கைது செயதனர்.நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே, காவக்காரன்பட்டியை சேர்ந்தவர் முருகன், 42; டீ மாஸ்டர். இவரது மனைவி வள்ளி, 37. இருவரும், எருமப்பட்டி, கைகாட்டியில் உள்ள டீ கடையில் வேலை செய்து வந்தனர். அதே கடையில், கண்ணனுார், தவிட்டுப்பட்டியை சேர்ந்த டீ மாஸ்டர் அருண்குமார், 25, என்பவரும் வேலைசெய்து வந்தார். இந்நிலையில், முருகனின் மனைவி வள்ளிக்கும், அருண்குமாருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த கணவன் முருகன், மனைவி வள்ளியை பலமுறை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மனைவி வள்ளி, டீ மாஸ்டர் அருண்குமார் ஆகிய இருவரும், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த முருகனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக கடந்த, 3ல், அருண்குமார், இவரது நண்பரான எருமப்பட்டி, சந்தைப்பேட்டையை சேர்ந்த சிவா, 26, மற்றும் முருகன் ஆகியோர் சேர்ந்து, காவக்காரன்பட்டி செல்லும் சாலையில் உள்ள இடத்தில் மது குடித்துள்ளனர். இதில் போதை தலைக்கேறிய முருகன் மயங்கி கிடந்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த மனைவி வள்ளி மற்றும் அருண்குமார், சிவா ஆகியோர் சேர்ந்து, முருகனின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, ஒன்றும் தெரியாததுபோல் அங்கிருந்து சென்றுள்ளனர்.பின், மர்மமான முறையில் இறந்து கிடந்த முருகனின் உடலை கைப்பற்றிய எருமப்பட்டி போலீசார், நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதில், டீ மாஸ்டர் முருகன் மது குடித்து உயிரிழக்கவில்லை; கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்து. இதையடுத்து, முருகனின் மனைவி வள்ளி மற்றும் உடன் பணிபுரிந்த அருண்குமாரிடம், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, கள்ளக்காதலுக்கு முருகன் இடையூறாக இருந்ததால், மது வாங்கி கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, மனைவி வள்ளி, டீ மாஸ்டர் அருண்குமார் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சிவா ஆகியோரை, நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை