உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

சேலம், சிறுமிக்கு தொல்லை கொடுத்த வாலிபருக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.சங்ககிரி அருகில் உள்ள வடுகப்பட்டி, தாதவராயன்குட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25, இவர் கடந்த 2021 ஆக.,2ல், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சதீஷ்குமாரை கைது செய்தனர். இவ்வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், சதீஷ்குமாருக்கு மூன்று ஆண்டு சிறை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி