2 நாள் கன மழையால் 30 ஏக்கர் பருத்தி சேதம்
வீரபாண்டி, வீரபாண்டி, இனாம் பைரோஜி ஊராட்சியில் ஏராளமான விவசாயிகள், பருத்தி, சோளம் உள்ளிட்ட விவசாயம் மேற்கொள்கின்றனர். அப்பகுதியில் இரு நாட்களாக பெய்த கன மழையால், புதுப்பாளையம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி, பிச்சாம்பாளையத்தில் உள்ள விவசாய நிலங்களில் பாய்ந்து, அதிகளவில் தேங்கியது. சோளம், பருத்தி செடிகள் முற்றிலும் மூழ்கி சேதமாகின. குறிப்பாக, 30 ஏக்கரில், 15 விவசாயிகள் பயிரிட்டிருந்த பருத்தி செடிகள் முற்றிலும் மூழ்கின. இதனால், 3 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து வீரபாண்டி வேளாண் உதவி இயக்குநர் கார்த்திகாயினி கூறுகையில், ''விவசாயிகளின் தோட்டங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.