உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 306 கிலோ புகையிலை: காரில் கடத்தியவர் கைது

306 கிலோ புகையிலை: காரில் கடத்தியவர் கைது

சேலம், சேலம், அழகாபுரம் போலீசார், நேற்று காலை, 7:00 மணிக்கு, ரெட்டியூர் சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பதிவெண் இல்லாத, 'கிரிடா' கார், வந்த வேகத்தில் திரும்பிச்சென்றது. சந்தேகமடைந்த போலீசார், பின் தொடர்ந்து விரட்டிச்சென்று, எக்ஸ்சர்வீஸ்மேன் காலனியில், காரை மடக்கினர். பின் நடந்த சோதனையில் காருக்குள், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், 27 மூட்டைகளில், 306 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.விசாரணையில் ஓட்டிவந்தவர், ராஜஸ்தானை சேர்ந்த பஜன்லால், 26, என தெரிந்தது. வெளி மாநிலங்களில் மொத்தமாக வாங்கி வந்து, விற்பனையில் ஈடுபட்டு வருவதை ஒப்புக்கொண்டார். காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், பஜன்லாலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ