ரயில் மறியல் போராட்ட முயற்சிவி.சி., கட்சியினர் 35 பேர் கைது
ரயில் மறியல் போராட்ட முயற்சிவி.சி., கட்சியினர் 35 பேர் கைதுசேலம், டிச. 20-அம்பேத்கர் குறித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, வி.சி., சார்பில் நேற்று ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில், நேற்று வடக்கு மாவட்ட செயலர் காஜாமைதீன், தெற்கு மாவட்ட செயலர் மொழியரசு ஆகியோர் தலைமையில், 40க்கும் மேற்பட்டோர் சூரமங்கலம் தபால் நிலையம் அருகில், நேற்று காலை திரண்டனர்.அங்கிருந்து கோஷம் எழுப்பியபடியே, ஜங்ஷன் ரயில் நிலையம் நோக்கி சென்றனர். சூரமங்கலம் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஐந்து பெண்கள் உள்பட, 35 பேரை கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வி.சி.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.