உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 4 சுகாதார நிலையங்களுக்குரூ.44 லட்சத்தில் உபகரணம்

4 சுகாதார நிலையங்களுக்குரூ.44 லட்சத்தில் உபகரணம்

4 சுகாதார நிலையங்களுக்குரூ.44 லட்சத்தில் உபகரணம்சேலம்:மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, 'பவர்கிரிட்' நிறுவனம் சார்பில், சமூக பொறுப்பு நிதி திட்டத்தில், மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா, சேலம், கன்னங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ஜெயந்தி தலைமை வகித்தார். 'பவர்கிரிட்' நிறுவன முதுநிலை பொது மேலாளர் பாலு, துணை பொது மேலாளர் சரத் சந்திரா, முதன்மை மேலாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர், கன்னங்குறிச்சி, திருமனுார், காரிப்பட்டி, பேளூர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, மருத்துவ உபகரணங்களை வழங்கினர். குறிப்பாக, 'அல்ட்ராசவுண்ட் இயந்திரம், இன்பென்ட் வார்மர், இ.சி.ஜி., இயந்திரம், செமி ஆட்டோ மெஷின், அறுவை சிகிச்சை அரங்க விளக்குகள், டேபிள் என, 44.39 லட்சம் ரூபாய் மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட சுகாதார அலுவலர் சவுண்டம்மாள், மருத்துவ அலுவலர் அமுதாராணி, கண்காணிப்பாளர் சங்கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை