கார் டிரைவரை மடக்கி தாக்கிய 4 பேர் கைது
சேலம், சேலம், சிவதாபுரம், ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் முருகன், 35. நேற்று முன்தினம் இளம்பிள்ளையில் இருந்து, 'இண்டிகா' காரில் சிவதாபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். நாயக்கம்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் சிலர், இருசக்கர வாகனத்தை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கார், இருசக்கர வாகனம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் அங்கிருந்தவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்று காரை மடக்கினர். பின், கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டதோடு, முருகனை தாக்கினர். காயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரித்து, நாயக்கம்பட்டியை சேர்ந்த நவீன்குமார், 25, மயில்சாமி, 26, தீபக், 19, செல்வகுமார், 25, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.