நைனாமலை பகுதியில் ஆடு திருடிய 4 பேர் கைது
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அருகே காளப்ப நாயக்கன்பட்டி ராசாக்கவுண்டன் புதுார் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் விவசாயி செந்தில். இவரது மனைவி ராணி ஆடுகள் வளர்த்து வருகிறார். நைனாமலை அருகே உள்ள வனப்பகுதியில், இவருக்கு சொந்தமான ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஆடுகள் சத்தம் போடுவதை கேட்ட ராணி, ஓடி சென்று பார்த்துள்ளார். அங்கு 4 பேர் இரண்டு டூவீலரில் ஆடுகளை திருடிக் கொண்டு சென்றது தெரியவந்தது. உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன், இரண்டு டூவீலர்களையும் பிடித்து ஆடுகளை திருடி சென்ற, 4 பேரையும் சேந்தமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ராசாக்கவுண்டன் புதுாரை சேர்ந்த முருகேசன், 55, சேந்தமங்கலம் சுரேஷ், 35, பச்சுடையாம்பட்டி புதுார் பெரியசாமி, 36, சின்ராஜ், 28, என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்து, சேந்த மங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.