சாலை விதிகளை மீறிய 45 பேருக்கு அபராதம்
ஏற்காடு: ஏற்காடு, ஒண்டிக்கடை புறக்காவல் நிலையம் எதிரே, ஏற்காடு போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், கார்களில் சீட் பெல்ட் போடாமல் வந்தவர்கள் என, 45 பேருக்கு அபராதம் விதித்தனர். மேலும் வாகனங்களை வேகமாக ஓட்டிய-வர்கள், சாலை விதிகளை கடைப்பிடிக்காதவர்களை எச்சரித்து அனுப்பினர்.