மக்கள் நீதிமன்றத்தில் 4,711 வழக்குக்கு தீர்வு
சேலம், தேசிய மற்றும் மாநில சட்டப்பணி ஆணைக்குழு சார்பில், சேலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், சங்ககிரி, ஆத்துார், மேட்டூர், ஓமலுார், ஏற்காடு, வாழப்பாடி, இடைப்பாடி தாலுகா நீதிமன்றங்களில், நேற்று மக்கள் நீதிமன்றம் கூடியது. ஆணை குழு தலைவர், மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தலைமையில் நடந்த, 16 அமர்வுகளில், 6,526 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில், 4,711 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 43.02 கோடி ரூபாய் தீர்வு தொகையாக வழங்கப்பட்டன.அதில் மோட்டார் வாகன விபத்து வழக்கில் ரேவதி என்பவர், இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்றுவிட்டு, ஏழுவாடி சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில், சேலத்தை நோக்கி வந்தபோது, டேங்கர் லாரி மோதியதில் பலியானார். இதனால் அவரது கணவர், 3 குழந்தைகளுக்கு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம், 22 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது.