சங்ககிரி அருகே சாலை விபத்தில் 5 பேர் காயம்
சங்ககிரி: சங்ககிரி அருகே, லாரி பின்புறத்தில் கார் மோதியதில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். தருமபுரி மாவட்டம், பொம்மிடியை சேர்ந்த சுதர்சன்சுவாதி, 55, அவரது உறவினர்கள் சேலத்தை சேர்ந்த திருமல்லேஸ்வரன், பொம்மிடியை சேர்ந்த விஜயகுமார், கேசவன், முருகன் ஆகிய ஐந்து பேரும், வோல்ஸ்வேகன் காரில் திருச்செங்கோட்டிலிருந்து, சங்ககிரி வழியாக சேலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்-தனர்.நேற்று மாலை, 6:00 மணிக்கு ஐவேலி பஸ் ஸ்டாப் அருகே செல்லும் போது, முன்னால் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி பின்புறத்தில், கார் மோதியதில் காரில் சென்ற ஐந்து பேரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள், சேலம் தனியார் மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சங்ககிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.