உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நகைக்கடை ஊழியர்களை தாக்கிய உரிமையாளர் உள்பட 5 பேர் கைது

நகைக்கடை ஊழியர்களை தாக்கிய உரிமையாளர் உள்பட 5 பேர் கைது

ஆட்டையாம்பட்டி, ஆட்டையாம்பட்டி அருகே, பாப்பாரப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன், 54, நகை கடை வைத்துள்ளார். அ.தி.மு.க.,வை சேர்ந்த இவர், ஊராட்சி முன்னாள் தலைவி திலகவதியின் கணவர். இவரது கடையில் ஆட்டையாம்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார், 24, மகேஸ்வரன், 24, பல ஆண்டாக பணிபுரிகின்றனர். இவர்கள், கடையில் இருந்த நகைகளை சிறிது சிறிதாக திருடியதாக சந்தேகம் அடைந்தார். இதனால் இருவரையும், ரவிச்சந்திரன், அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று விசாரித்தார். இதை அறிந்து, நேற்று காலை, சுரேஷ்குமார் ஆதரவாளர்கள் பலர், அங்கு வந்து வாக்குவாதம் செய்தனர். இது கைகலப்பாக மாறியது. ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:ரவிச்சந்திரன், அவரது மகன் ஆகாஷ், 29 மற்றும் யுவராஜ், 23, கார்த்திக், 30, பிரவீன்குமார், 24, ஆகியோர் தடியால் தாக்கியுள்ளதாக புகார் வந்தது. இதில் சுரேஷ்குமார், மகேஸ்வரன், இவர்களது நண்பர்கள் சதீஷ்குமார், 31, தினேஷ்குமார், 29, பூபாலன், 25, காயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுரேஷ்குமார் புகார்படி, ரவிச்சந்திரன், ஆகாஷ் உள்பட, 5 பேரையும் கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை