உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் 60 சவரன் கொள்ளை

சேலத்தில் 60 சவரன் கொள்ளை

சேலம்,:ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து துறை ஊழியர் வீட்டில், 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. சேலம், அயோத்தியாப்பட்டணம், மேட்டுப்பட்டி தாதனுார், வட்டேரி காட்டை சேர்ந்தவர் வெங்கடாஜலம், 64; தமிழக அரசு போக்குவரத்து துறையில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி செண்பக வடிவு, 58, மாமியார் இந்திராணி, 82. ஒரே வீட்டில் வசிக்கும் இவர்கள், நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். நேற்று வீடு திரும்பிய போது, வீட்டு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 60 சவரன் நகைகள், 50,000 ரூபாய், வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை