உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 63 நாயன்மார் ஊர்வலம்; சிவனடியார்கள் பங்கேற்பு

63 நாயன்மார் ஊர்வலம்; சிவனடியார்கள் பங்கேற்பு

இடைப்பாடி:இடைப்பாடி சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை மூலம், அங்குள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், நாயன்மார்கள் குரு பூஜை விழா, கடந்த, 12ல் தொடங்கியது. தினமும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. நேற்று, 63 நாயன்மார்கள், 9 தொகை அடியார், 4 சந்தன குறவர், ஒரு பிச்சாடனர் என, செம்பு, பித்தளையால் செய்யப்பட்ட ஒன்றரை அடி உயரத்தில் உள்ள, 76 சிலைகளுக்கு பூஜை நடந்தது.தொடர்ந்து, 63 நாயன்மார்கள் ஊர்வலம் புறப்பட்டது. அதில் நஞ்சுண்டேஸ்வரர், மாமன்னர் ராஜராஜன் சிலைகளும் சென்றன. கோவிலில் புறப்பட்ட ஊர்வலத்தில், கைலாய வாத்தியங்களுடன் சிவகுருநாதர்கள் உள்பட, சிவபக்தர்கள், சிவனடியார் திருக்கூட்ட சிவனடியார்கள், முஸ்லிம் தெரு, பவானி சாலை, பஸ் ஸ்டாண்ட் வழியே சென்று மீண்டும் கோவிலை அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை