உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஸ்கூட்டியில் சென்ற மூதாட்டியிடம் 6.5 பவுன் பறிப்பு

ஸ்கூட்டியில் சென்ற மூதாட்டியிடம் 6.5 பவுன் பறிப்பு

சங்ககிரி : சங்ககிரி அருகே ஆலத்துார், பெரியாம்பாளையம், மோளக்காரன்காட்டை சேர்ந்த சுப்ரமணி மனைவி கந்தம்மாள், 53. இவர் வழக்கம்போல் பச்சாம்பாளையத்தில் உள்ள வீடுகளில் பால் ஊற்றி விட்டு, மீண்டும் ஸ்கூட்டியில் நேற்று காலை, 7:30 மணிக்கு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பெரியாம்பாளையம் காட்டுவளவு அருகே வந்தபோது, 30 வயது மதிக்கத்தக்கவர், எதிரே பதிவெண் இல்லாத கறுப்பு நிற, 'பல்சர்' பைக்கில் வந்தவர், கந்தம்மாள் அணிந்திருந்த, 6.5 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்றார். இதுகுறித்து அவர் புகார்படி, சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை