உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மே மாதத்தில் 67 பேர் ஓட்டுனர் உரிமம் ரத்து

மே மாதத்தில் 67 பேர் ஓட்டுனர் உரிமம் ரத்து

சேலம், சேலம் போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டில், சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, ஆத்துார், சங்ககிரி, மேட்டூர், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்; ஓமலுார், வாழப்பாடி, பாலக்கோடு, அரூரில் பகுதி நேர அலுவலகங்கள் செயல்படுகின்றன. கடந்த மே மாதத்தில், 11 அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் குழுவினர், 1,002 வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தினர். அதில் சாலைவிதி மீறியவர்களில், 67 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது.அனுமதித்த அளவை விட அதிக பாரம் ஏற்றியது, சீட் பெல்ட் அணியாதது, முகப்பு விளக்கை அதிக வெளிச்சத்துடன் ஒளிரவிட்டது, அதிக சத்தத்தை எழுப்பிய ஏர்ஹாரன் போன்ற பல்வேறு விதிமீறல்கள் கண்டறிந்து, 39.73 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அதில், 16.13 லட்சம் ரூபாய் உடனே வசூலிக்கப்பட்டது. அதில் அதிகபட்சமாக, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டிய, 192 பேர், அதிவேகத்தில் வாகனம் இயக்கிய, 129 பேர், நெம்பர் பிளேட் இல்லாத வாகனம், 77, அதிக பயணியரை ஏற்றிய, 65 வாகனம், அதிக பாரம் ஏற்றிய, 56 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தவிர, 17.71 லட்சம் ரூபாய் சாலை வரி வசூலானது. அத்துடன் தகுதிச்சான்று(எப்.சி.,), அனுமதி சீட்டு(பர்மிட்) இல்லாத, 155 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை