உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தக்காளி சாதம் சாப்பிட்ட 7 வீராங்கனைக்கு வாந்தி

தக்காளி சாதம் சாப்பிட்ட 7 வீராங்கனைக்கு வாந்தி

சேலம், சேலம், மரவனேரியில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளியில், தனியார் அகாடமி சார்பில் நேற்று, மாநில விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். அவர்களுக்கு மதியம், தக்காளி சாதம் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட வீராங்கனைகளில், 7 பேருக்கு மட்டும், அந்த சாதம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பாதிப்பு இல்லாததால் வீடு திரும்பினர். அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ