உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பேரலை தட்டிவிட்டதில் மோதல் இரு தரப்பில் 8 பேருக்கு காப்பு

பேரலை தட்டிவிட்டதில் மோதல் இரு தரப்பில் 8 பேருக்கு காப்பு

மேட்டூர், கொளத்துார், நவப்பட்டி ஊராட்சி நாட்டாமங்கலத்தை சேர்ந்தவர் பிரவீன், 24. தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர். அதே பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ், 24. இவர் வீடு கட்டும் பணி மேற்கொள்கிறார். இவர் கடந்த, 29 மாலை, 6:30 மணிக்கு, கட்டுமான பொருட்களை வீடு கட்டும் இடத்துக்கு கொண்டு சென்றார்.அப்போது அங்கு வசிக்கும் லாவண்யா என்பவரின் வீட்டுக்கு வெளியே, தண்ணீர் பேரல் இருந்தது. சாலையில் இடையூறாக இருந்ததாக, பேரலை ஆகாஷ் தள்ளிவிட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக இரு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டது.இரு தரப்பினரும் மேட்டூர் போலீஸ் ஸ்டேஷனில், 30ல் புகார் செய்தனர். இதில் ஆகாஷ் புகார்படி லாவண்யா, பிரவீன், பெருமாள், பாவம்மாள் ஆகியோர் மீதும், பிரவீன் புகார்படி ஆகாஷ், புகழ், கபிலன், குட்டியப்பன் மீதும், போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து, 8 பேரையும் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !