உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 12 கடைகளுக்கு 82 பேர் போட்டி: ஒரே ஒரு கடை மட்டும் ஏலம்

12 கடைகளுக்கு 82 பேர் போட்டி: ஒரே ஒரு கடை மட்டும் ஏலம்

வீரபாண்டி: டவுன் பஞ்சாயத்து சார்பில் புதிதாக கட்டப்பட்ட, 12 கடைக-ளுக்கு, 82 பேர் போட்டி போட்டு டிபாசிட் தொகை செலுத்-தியும், ஒரே ஒரு கடை மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டது.ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் எதிரே, வாரச்சந்தைக்கு முன்-புறம் டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான, பழமையான வணிக வளாகத்தை இடித்து விட்டு அதே இடத்தில், 2.33 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக, 12 கடைகளுடன் வணிக வளாகம் கட்டி முடித்து திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. கடை-களின் மாத வாடகைக்கான ஏலம், நேற்று டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் செயல் அலுவலர் (பொ) மேகநாதன் தலை-மையில், சேர்மன் முருகபிரகாஷ் முன்னிலையில் நடந்தது.ஒவ்வொரு கடைக்காக நடந்த ஏலத்தில், தலா ஒரு லட்சம் ரூபாய் டிபாசிட் பணம் கட்டியவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனும-திக்கப்பட்டனர். திருச்செங்கோடு சாலையில் உள்ள, ஆறு கடை-களில் முதல் மற்றும் இரண்டாம் எண் கடைகளுக்கு, யாரும் ஏலம் கோராத நிலையில், மூன்றாம் எண் கடைக்கு பலத்த போட்டி இருந்தது. இறுதியாக மாத வாடகை, 16 ஆயிரத்து, 100 மற்றும் 18 சதவித ஜி.எஸ்.டி., சேர்த்து ரவிசங்கர் என்பவருக்கு ஏலம் விடப்பட்டது. இவர் ஓராண்டுக்கான வாடகை மற்றும் ஜி.எஸ்.டி., தொகையை, 24 மணி நேரத்துக்குள் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் டிபாசிட் தொகை திரும்ப பெற முடியாது. இந்த ஒரு கடையை தவிர மற்ற 11 கடைகளுக்கு யாரும் ஏலம் கோராததால், மீண்டும் நடத்தப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ