ரூ.2,000 நோட்டுகளில் 98% வங்கிக்கு திரும்பின
புதுடில்லி: கடந்த, 2023, மே, 19ம் தேதி, ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்-தது. அப்போது, 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்நிலையில் ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிக்-கையில், '2024 டிச., 31ம் தேதி நிலவரப்படி, மக்களிடம் புழக்-கத்தில் இருந்த, 2,000 ரூபாய் நோட்டுகளில், 98.12 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இன்னும், 6,691 கோடி ரூபாய் மதிப்-பிலான நோட்டுகள் மக்களிடம் உள்ளன' என, கூறப்பட்டுள்ளது.