உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செப்., 4ல் கும்பாபிேஷக விழாவுக்கு 27 அடி உயரத்தில் கொடி மரம் நடல்

செப்., 4ல் கும்பாபிேஷக விழாவுக்கு 27 அடி உயரத்தில் கொடி மரம் நடல்

ஆத்துார், நரசிங்கபுரம் தர்மராஜர், திரவுபதி அம்மன் கோவில், 20 கோடி ரூபாயில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, செப்., 4ல், கும்பாபிேஷகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி கொடி மரம் நடும் விழா நேற்று நடந்தது. முன்னதாக கோ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் செய்து, யாக சாலையில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன.தொடர்ந்து, நவதானியம், பால் ஊற்றிய குழிக்குள், ஊர் முக்கியஸ்தர்கள், 'கிரேன்' இயந்திரம் உதவியுடன், 27 அடி உயர கொடி மரத்தை நட்டனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !