உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தகராறை தடுக்க முயன்ற ஏட்டு மீது சரமாரி தாக்குதல்

தகராறை தடுக்க முயன்ற ஏட்டு மீது சரமாரி தாக்குதல்

சேலம்: சேலம், அம்மாபேட்டை யில் செயல்பட்ட, அன்னை தெரசா அறக்கட்டளையில், பணம் இரட்டிப்பு தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக, அறக்கட்டளையை சேர்ந்த, 4 பேரை, போலீசார் கைது செய்தனர். இதில், ஒருங்கி-ணைப்பாளராக இருந்த செந்தில்குமார் தலைமறைவானர். இதனால் அவர் வசிக்கும் குறிஞ்சி நகர், குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், ஏட்டு குமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு, அங்கு சிலர் மது போதையில் இருந்-தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவொருக்-கொருவர் தாக்கிக்கொண்டனர். ஏட்டு குமார், அவர்களை சமாதா-னப்படுத்த முயன்றார். அதில் ஆவேசம் அடைந்த இரு வாலி-பர்கள், ஏட்டுவை சரமாரியாக தாக்கினர். காயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு அழைத்துச்சென்றனர். இதை அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள், அங்கு சென்று விசாரித்தனர். ஆனால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். அவர்கள் குறித்து, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி