மகளிர் இன்ஸ்பெக்டரை கண்டித்து ஒரு குடும்பத்தினர் சாலை மறியல்
ஆத்துார்: 'நீ யோக்கியமா' என, தாயிடம் அவதுாறாக பேசியதாக கூறி, மகள் உள்ளிட்ட குடும்பத்தினர், மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்-டரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே அம்மம்பாளையம், காந்திபுரத்தை சேர்ந்த, வரதராஜ் மகள் அம்சவள்ளி, 19. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், பாவளம் கிராமத்தை சேர்ந்த, டிரைவர் சரவணன், 24. இவர்களுக்கு, 2023 ஜூன், 10ல் திருமணமானது. இந்நிலையில் அம்சவள்ளி, 2024 டிச., 19ல், ஆத்துார் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில், 'கணவர், வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்-கொண்டது குறித்து கேட்டபோது, 50 பவுன் நகைகளை என் பெற்றோரிடம் வாங்கி வந்தால் குடும்பம் நடத்துவதாக கூறி, தக-ராறு செய்து வந்தார். மாமனார், மாமியாரும் கொடுமை செய்து வந்தனர். சில மாதங்களுக்கு முன், என் பெற்றோர் வீட்டில் விட்-டுச்சென்ற கணவர், மீண்டும் வரவில்லை. மாமனார், மாமியார், கணவர், அவருடன் தொடர்பில் உள்ள பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார்.இதுதொடர்பாக, அம்சவள்ளி, அவரது தாய் நிர்மலாதேவி, தந்தை வரதராஜ், நேற்று, ஆத்துார் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வந்தனர். ஆனால் மாலை, 5:00 மணிக்கு, 'மகளிர் போலீசார், கணவர் குறித்து விசாரிக்காமல், என் தாயை அவதுாறாக பேசுகின்-றனர்' என கூறி, அம்சவள்ளி உள்ளிட்ட குடும்பத்தினர், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எதிரே, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்-சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்திய பின், 5:30 மணிக்கு மறியலை கைவிட்டனர்.அம்சவள்ளி கூறுகையில், ''கணவர் மீதான புகார் குறித்து விசாரிக்-கும்படி கூறியபோது, என் தாயை பார்த்து, இன்ஸ்பெக்டர் மலர்-கொடி, 'நீ யோக்கியமா இருக்கிறீயா...' என பேசினார். பின் கள்-ளக்குறிச்சி போகும்படி கூறுகின்றனர். புகார் கொடுக்கும் பெண்-களை, விசாரணை பெயரில் தகாத முறையில் பேசுகின்றனர்,'' என்றார்.இன்ஸ்பெக்டர் மலர்கொடி கூறுகையில், ''புகார் மீது விசாரிக்கும்-போது ஆண்கள் எல்லோரும் யோக்கியன்களா இல்லை. இருத-ரப்பும் அழைத்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினேன். ஆனால் அம்சவள்ளியின் தாயை திட்டியதாக மிகைப்படுத்தி பேசுகின்றனர்,'' என்றார்.