உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முட்புதரில் பெண் சிசு வீச்சு

முட்புதரில் பெண் சிசு வீச்சு

சேலம், சேலம், கிச்சிப்பாளையம் காளிகவுண்டர் காடு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருந்து, பாத்திமா நகர் செல்லும் சாலையோரம் இருந்த முட்புதரில், நேற்று மதியம், குழந்தை அழுகுரல் கேட்டது. அந்த வழியே சென்ற சிலர் பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் சிசு, போர்வையில் சுற்றப்பட்டு கட்டைப்பையில் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அந்த குழந்தையின் தொப்புள் கொடி அறுக்கப்படாததால் ரத்தமாக இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள், கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள், குழந்தையை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிசுவை வீசியவர்கள் யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !