குக்கர் ஆலையில் தீ விபத்து ரூ.10 லட்சத்துக்கு பொருட்சேதம்
சேலம்: குக்கர் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு பொருட்சேதம் ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம், அஸ்தம்பட்டி சங்கர் நகரை சேர்ந்தவர் தேக்கு ராஜ், 54. இவர், கந்தம்பட்டி, மூலப்பிள்ளையார் கோவில் தெருவில், குக்கர் தயாரிப்பு ஆலை வைத்துள்ளார். அங்கு நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஆலை மேலாளர், ஊழியர்கள் ஆலையை பூட்டிச்சென்றனர். ஆனால் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு அங்-கிருந்து கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து தீப்பிடித்து எரிந்-தது. அங்குள்ளவர்கள் தகவல்படி, தேக்குராஜ் அன்னதானப்பட்டி போலீசார், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து தண்-ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர்.கட்டுப்படுத்த முடியாததால், மேலும் செவ்வாய்ப்பேட்டையில் இருந்து ஒரு வாகனம், ஓமலுாரில் இருந்து ஒரு வாகனம் வரவ-ழைக்கப்பட்டு, 3 வாகனங்கள் மூலம், 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் ஆலையில் இருந்த குக்கர், அதன் தயாரிப்பு உபகரணங்கள் எரிந்து நாசமாகி-விட்டன. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்-கலாம். விபத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் சேத-மடைந்ததாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.