நல்லா இருக்கிற சாலையை மீண்டும் போட்டு பில் எடுக்கப்படுகிறது
ஆத்துார்: நரசிங்கபுரம் நகராட்சி கூட்டம், தி.மு.க.,வை சேர்ந்த, தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் நடந்தது.அதில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., கவுன்சிலர் மாலா: கழிவுநீர் கால்வாய் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். 4 ஆண்டாக கேட்டு வருகிறோம். தலைவரே... கருணை காட்டுங்கள். மக்களுக்காக தான் கேட்கிறோம்.அலெக்சாண்டர்: நடவடிக்கை எடுக்கப்படும்.அ.தி.மு.க., கவுன்சிலர் சுரேஷ்: ஆத்துார் - ராசிபுரம் சாலையில், சேலம் - விருதாசலம் ரயில் தடத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி, 8 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேம்பால பணியை நிறுத்தியுள்ளதால், இந்த பாதையை, ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும்.அலெக்சாண்டர்: துறை அலுவலர்களிடம் தெரிவிக்கப்படும்.அ.தி.மு.க., கவுன்சிலர் கோபி: நல்லா இருக்கிற சாலையை மீண்டும் மீண்டும் போட்டு, 'பில்' எடுக்கப்படுகிறது. ஆனால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பலமுறை கோரிக்கை வைத்தும் ஏற்க மறுக்கப்படுகிறது.தலைவரின் வார்டுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. மற்ற வார்டுகளுக்கு பாரபட்சம் காட்டுவது ஏன்?அலெக்சாண்டர்: என் வார்டுக்கு அதிக நிதி ஒதுக்குவது என்பது தவறான தகவல். அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கப்படுகிறது.தொடர்ந்து அவர்கள் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் கூட்டம் முடிந்தது.