மழை நீர் குட்டையாக தேங்கிய வளாகம் ஒன்றிய உயர்நிலைப்பள்ளிக்கு விடுமுறை
மேட்டூர்: மழைநீர் பள்ளி வளாகத்தில் குட்டையாக தேங்கி நின்றதால், ஊராட்சி ஒன்றிய அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஒரு நாள் விடு-முறை விடப்பட்டது.சேலம், மேட்டூர் தாலுகா, கொளத்துார் ஒன்றியத்தில் நவப்பட்டி ஊராட்சி உள்ளது. இங்கு மேட்டூர்-ஈரோடு நெடுஞ்சாலையோரம், ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி உள்ளது. அதன் வளாகத்தில் துவக்கப்பள்ளியில், 90, உயர்நிலைப்பள்ளியில், 131 என மொத்தம், 221 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.மழை காலத்தில், பள்ளி வளாகத்தில் சிறிய அளவில் தண்ணீர் தேங்கி நிற்கும். அந்த நீர் வடிகால் வழியாக வெளியேறி விடும். நேற்று முன்தினம் இரவு மேட்டூரில், 144.6 மி.மீ., மழை பெய்தது. இதனால், பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி நின்றதால் மாணவ, மாணவியர் வகுப்பறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்-பட்டது. துவக்க, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் லட்-சுமி, அமல்கிளாரா (பொ) ஆகியோர் கல்வித்துறை அதிகாரிக-ளுக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, நேற்று ஒரு நாள் மட்டும் நவப்பட்டி ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளிக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது. இதுகுறித்த குறுந்த-கவல் ஆசிரியர்கள் மூலம், மாணவர்களின் பெற்றோருக்கு தெரி-விக்கப்பட்டது.* பள்ளி வளாகம் மேட்டூர் நகராட்சி அலுவலகம் அருகாமையில் இருந்ததால், நேற்று காலை விரைந்து வந்த நகராட்சி துாய்மை பணியாளர்கள், வடிகாலில் உள்ள அடைப்புகளை அகற்றி மழை நீரை வெளியேற்றினர்.