உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுவனுக்கு கத்திக்குத்து சகோதரர்களுக்கு காப்பு

சிறுவனுக்கு கத்திக்குத்து சகோதரர்களுக்கு காப்பு

சேலம், ஆட்டையாம்பட்டி, ஸ்டாலின் நகரை சேர்ந்த, 17 வயது சிறுவன், பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஓவியன், முரளி, நவீன், சின்னதுரை ஆகியோருக்கும் இடையே, 2024 விநாயகர் சதுர்த்தியின்போது தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் உருவானது.நேற்று முன்தினம் காலை, 4 பேரும் மதுபோதையில், சிறுவன் வீட்டுக்கு சென்று, 'ஊருக்குள் வரக்கூடாது. மீறி வந்தால் கொன்று விடுவோம்' என மிரட்டினர். தொடர்ந்து இரவு, 11:30 மணிக்கு, மீண்டும், 4 பேரும் சிறுவன் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினர். அப்போது ஓவியன், சிறுவனை கத்தியால் குத்திவிட்டார். பின் அவர்கள் தப்பினர்.படுகாயம் அடைந்த சிறுவனை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்து, ஸ்டாலின் நகரை சேர்ந்த ஓவியன், 25, அவரது சகோதரர் முரளி, 32, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை