உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமியை திருமணம் செய்து கைவிட்டு வேறு பெண்ணை மணந்தவருக்கு வலை

சிறுமியை திருமணம் செய்து கைவிட்டு வேறு பெண்ணை மணந்தவருக்கு வலை

சங்ககிரி: இடைப்பாடி, ஆணைபள்ளத்தை சேர்ந்தவர் பூபதி, 25. பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், லாரி மெக்கானிக்காக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியை, 2020ல் காத-லித்தார். இரு குடும்பத்தினர் எதிர்த்த நிலையில், அதை மீறி சிறுமியை, பூபதி திருமணம் செய்தார். தற்போது, 19 வயதான நிலையில், 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.அப்பெண் நேற்று, சங்ககிரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், 'என் கணவர், நான் சிறுமியாக இருந்தபோது திருமணம் செய்து கொண்டார். தற்போது குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவர், வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சிறுமியான என்னை திருமணம் செய்த பூபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார். இதனால் போலீசார், போக்சோ வழக்குப்ப-திந்து, பூபதியை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி