தீபாவளியை முன்னிட்டு வரும் 30ல் சிறப்பு சந்தை
தலைவாசல்: தீபாவளியை முன்னிட்டு, வரும், 30ல் சிறப்பு சந்தை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனுாரில் சனிதோறும் ஆட்டுச்சந்தை நடக்கிறது. நேற்று கூடிய சந்தையில், 2,200க்கும் மேற்பட்ட ஆடுகள், 600க்கும் மேற்பட்ட மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வரும், 31ல் தீபாவளி பண்டிகை என்பதால், ஏராளமான வியாபாரிகள், சந்தையில் தலைச்சேரி, போயர், செம்மறி, வெள்ளாடுகளை போட்டிபோட்டு வாங்கிச்சென்றனர். ஆடு, மாடுகள் மூலம், 2.50 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.இதுகுறித்து குத்தகைதாரர்கள் கூறுகையில், 'வரும், 31ல் தீபாவளி என்பதால், அதற்கு முந்தைய நாள் சிறப்பு ஆட்டுச்சந்தை நடக்கிறது. காலை, 5:00 முதல், 9:00 மணி வரை ஆடுகள் விற்பனை செய்யப்படும். காலை, 11:00 மணிக்கு மேல் மாடுகள் விற்பது குறித்து வியாபாரிகள், விவசாயிகளுக்கு, வீரகனுார் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.