உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உபரிநீர் போக்கியில் ரசாயன கழிவு அகற்றுவதற்கு ஆய்வு செய்த குழு

உபரிநீர் போக்கியில் ரசாயன கழிவு அகற்றுவதற்கு ஆய்வு செய்த குழு

மேட்டூர்: மேட்டூர் அணை உபரி நீர் போக்கியில் கலக்கும், ரசாயன கழிவு-களை அகற்றுவது தொடர்பாக நேற்று அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.மேட்டூர் அணை நிரம்பும் பட்சத்தில், உபரி நீர் போக்கி வழியாக வெளியேற்றப்படும் உபரி நீர், 3 கி.மீ., துாரம் பாய்ந்து மீண்டும் காவிரியாற்றில் ஒன்றாக கலக்கும். அந்த நீர் கலக்கும் பகுதியில் உள்ள தொட்டில்பட்டியில் சேலம் மாநகராட்சி, வேலுார் மாவட்-டத்துக்கு குடிநீர் எடுக்கும் நீரேற்று நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.உபரி நீர் போக்கியில் சின்னகாவூர் அருகே, சிட்கோ தொழிற்பேட்-டையில் உள்ள ஆலைகளின் ரசாயன கழிவுகள் ஓடையில் செல்கி-றது. அந்த கழிவுநீர் உபரி நீர் போக்கியில் கலக்கிறது. அந்த ரசா-யன கழிவுநீர் காவிரியாற்றில் கலக்கும் பட்சத்தில் சேலம், வேலுார் பகுதிக்கு செல்லும் குடிநீர் பாதிக்கும் அபாய நிலை உள்-ளது. நேற்று மேட்டூர் பா.ம.க., எம்.எல்.ஏ., சதாசிவம் கழிவுநீர் கலக்கும் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.ஆய்வின்போது, மாசுகட்டுப்பாடு வாரிய உதவி செயற்பொறி-யாளர் சாய்ராபானு, மேட்டூர் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் மாசுகட்டுப்பாடு வாரிய, நீர்வளத்துறை பொறியாளர் குழுவினர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ