முறையற்ற ஆசைக்கு எதிர்ப்பு கூலித்தொழிலாளி தற்கொலை
பெத்தநாயக்கன்பாளையம், டிச. 1-ஏத்தாப்பூர் அருகே நெய்யமலை, அக்கரைப்பட்டியை சேர்ந்தவர் சங்கர், 29. கூலித்தொழிலாளியான இவர், அதே பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள ஒரு மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று, அவரது உடலை கைப்பற்றி ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'ஏற்காட்டில் வசிக்கும், உறவினரின், 17 வயது சிறுமியை காதலித்தார்.இது முறையில்லை என்பதால், காதலிப்பது தவறு என, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த சங்கர் தற்கொலை செய்து கொண்டார்' என்றனர்.