மேலும் செய்திகள்
கோடையை வரவேற்கும் சரக்கொன்றை மலர்கள்
02-Apr-2025
சேலம்: கேரள மாநிலத்தில் தமிழ் புத்தாண்டு, சித்திரை பிறப்பை முன்னிட்டு, விஷூக்கனி திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.அன்று காலை, சுவாமி படங்கள் முன், தட்டுகள் நிறைய பல வண்ண மலர்கள், பழங்கள், இனிப்பு பதார்த்தங்களை வைத்து அதன் முன் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து அதில் கண் விழிப்பர்.இப்படி செய்தால் ஆண்டு முழுதும் சுபிட்சமாக இருக்கும் என்-பது நம்பிக்கை. இந்த பூஜையில், மஞ்சள் சரக்கொன்றை மலர் இடம்பெறும். இந்த நடைமுறையை, தமிழகத்திலும் பெரும்பா-லான மக்கள் கடைப்பிடிக்கின்றனர்.சேலத்தில் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே பிருந்தாவன் சாலை; பழைய சூரமங்கலம் சேலத்தாம்பட்டி சாலை; லைன்மேடு அருகே; கொண்டலாம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே; ஆட்டையாம்-பட்டி அருகே மருளையம்பாளையம் என ஆங்காங்கே மட்டும், சரக்கொன்றை மரங்கள் உள்ளன.அவற்றில் தற்போது மரம் முழுதும் இலைகள் தெரியாமல் கொத்து கொத்தாக மஞ்சள் வண்ண கொன்றை மலர்கள் பூத்துக்கு-லுங்குகின்றன.
02-Apr-2025