உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமியை காதலித்த வாலிபருக்கு வெட்டு

சிறுமியை காதலித்த வாலிபருக்கு வெட்டு

ஆத்துார்: ஆத்துார் அருகே புங்கவாடியை சேர்ந்தவர் பூபாலன், 25. இவர், 16 வயதுடைய, பிளஸ் 1 மாணவியை காதலித்தார். நேற்று காலை, 11:00 மணிக்கு, மாணவியை பார்க்க, அவரது வீடு அருகே பூபாலன் சென்றார். மாணவியின் சித்தப்பா மகனான, 17 வயது சிறுவன், மாண-வியின் தந்தை ஆகியோர், பூபாலனை கண்டித்தனர். இதில் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம-டைந்த சிறுவன், பூபாலனின் தலை பகுதியில், 3 இடங்களில் அரிவாளால் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் விழுந்த அவரை, உறவினர்கள் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல்சிகிச்-சைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை