ஆடி திருவிழா கம்பம் நடல்
தாரமங்கலம், தாரமங்கலம், கண்ணனுார் மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, கம்பம் நடும் விழா நேற்று நடந்தது. நாட்டாண்மைக்காரர் இனியன் தலைமையில் திரண்ட மக்கள், சேலம் சாலையில் உள்ள அரச மரக்கிளையை வெட்டி முக்கிய வீதிகள் வழியே ஊர்சாவடிக்கு எடுத்து வந்தனர். அருகே உள்ள நல்ல கிணற்றில் ஊறவைத்தனர். இரவு, 8:30 மணிக்கு மேல், கம்பத்துக்கு பூஜை செய்து, கோவிலுக்கு கொண்டு வந்து ஊஞ்சல் மண்டபம் முன் நட்டனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.