உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருமணிமுத்தாற்றுக்கு ஆரத்தி எடுத்து பூஜை

திருமணிமுத்தாற்றுக்கு ஆரத்தி எடுத்து பூஜை

சேலம், பவுர்ணமியை ஒட்டி, அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், திருமணிமுத்தாறு பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து, திருமணிமுத்தாற்றுக்கு, கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோட்டை மாரியம்மன் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.அதில் திருமணிமுத்தாற்றில் நீர் எடுத்து கோட்டை மாரியம்மனுக்கு அபி ேஷகம் செய்ய வேண்டி, சிறப்பு பூஜை நடந்தது. அதில் பெண்கள் உள்பட பலர், 1,008 அகல் விளக்கேற்றி வழிபட்டனர். தொடர்ந்து சந்நியாசிகள், வேதங்கள் முழங்க திருமணி முத்தாற்றுக்கு பூஜை செய்து, பூக்கள் துாவி அர்ச்சனை செய்தனர். பின் ஆரத்தி, மஹா தீபாராதனை காட்டினர். மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி, பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர்.சுவேத நதிதம்மம்பட்டி சுவேத நதி பகுதியொட்டி, காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. அங்கு சுவேத நதிக்கரையில் ஆரத்தி பூஜை நடந்தது. மழை வேண்டியும், நதியில் தொடர்ந்து நீர் பெருக்கெடுத்து ஓடவும் நடந்த பூஜையில், பவுர்ணமி நிலவுக்கும், சுவேத நதிக்கும், பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். பின் நதிக்கு பூக்கள் துாவி வழிபட்டனர். தொடர்ந்து பள்ளியறை பூஜையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.மகா சண்டி யாகம்ஆத்துார், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு, 7:00 மணிக்கு, கோ, கஜ, அஸ்வ, சுமங்கலி, பிரமச்சாரி, வடுக, கன்னிகா பூஜைகளுடன், மகா மங்கள சண்டி ேஹாமங்கள் நடந்தன. இரவு, வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். அதில் திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறுதல், கடன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நீங்க, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல், ஆத்துார் பெரிய மாரியம்மன் கோவிலில், உலக நன்மை வேண்டி யாக பூஜை நடந்தது. மூலவர் பெரியமாரியம்மன், வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். ஆத்துார், சம்போடை வன மதுரகாளியம்மன், ஆறகளூர் அம்பாயிரம்மன், வீரகனுார் பொன்னாளியம்மன், கெங்கவல்லி மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.சங்ககிரி, அரசிராமணி குள்ளம்பட்டி சோழீஸ்வரர் கோவிலில், பெரிய நாயகி அம்மன் உடனமர் சோழீஸ்வரர் சுவாமிகளுக்கு பால், தயிர், திருநீறு, சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை