மின்சாரம் பாய்ந்து ஏசி மெக்கானிக் பலி
சேலம்:சேலம், கந்தம்பட்டி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 28. 'ஏசி' மெக்கானிக்கான இவர், கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே ஆகாஷ் என்பவரது ஜெராக்ஸ் கடையில், நேற்று முன்தினம் இரவு, 'ஏசி' மாட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது கடை அருகே செல்லும் உயர் அழுத்த மின் கம்பி மீது கை மோதியதில் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.