உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி மாணவ, -மாணவியர் சாதனை

ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி மாணவ, -மாணவியர் சாதனை

மேச்சேரி :மேச்சேரி, ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர் பிரித்விராஜ், பொதுத்தேர்வில், 500க்கு, 494 மதிப்பெண் பெற்று, மேட்டூர் தாலுகா அளவில், 2ம் இடம், பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். அவர் தமிழ், ஆங்கிலம், அறிவியலில் தலா, -98, கணிதம், சமூக அறிவியலில் தலா, -100 மதிப்பெண்கள் பெற்றார்.மாணவர் கவியரசன், தமிழ், ஆங்கிலம், கணிதத்தில் தலா, -98, அறிவியலில், -99, சமூக அறிவியலில், -100 என, 493 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில், 2ம் இடம் பிடித்தார். மாணவி மேனகாதேவி, தமிழ்-, ஆங்கிலம், கணிதத்தில் தலா, -99, அறிவியலில், -94, சமூக அறிவியலில், -100 என, 491 மதிப்பெண்கள் பெற்று, 3ம் இடம் பிடித்தார். மேலும், 450 மதிப்பெண்களுக்கு மேல், 25 மாணவர்கள், 400க்கு மேல், 35 மாணவர்கள் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர்களை, பள்ளி தாளாளர் ராகவேந்திரா மணிவண்ணன், நிர்வாக அலுவலர் கவுசல்யா, துணைத்தலைவர் சுகன்ராஜ் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !