வன்கொடுமை புகாரில் 1 வாரத்தில் நடவடிக்கை
'வன்கொடுமை புகாரில் 1 வாரத்தில் நடவடிக்கை'சேலம்:தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய ஆய்வு கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதன் துணைத்தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். அதில் கலெக்டர் பிருந்தாதேவி, ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பொன்மணி, போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, எஸ்.பி., கவுதம் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதுகுறித்து இமயம் அண்ணாமலை கூறியதாவது:ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சேலம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவில் பெறப்படும் புகார் மனு, ஜாதிய கொடுமை குறித்து, பதிவு செய்யப்பட்ட வழக்குகள், தண்டனை உள்ளிட்டவையும் ஆய்வு செய்யப்பட்டது. இவை குறித்து பெறப்படும் மனுக்கள் மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.சிறுவனிடம் விசாரணைகாடையாம்பட்டி, பெரிய வடகம்பட்டியை சேர்ந்த,11 வயதுடைய, 6ம் வகுப்பு மாணவரை, அதே பகுதியை சேர்ந்த இரு பெண்கள் தாக்கியதாக, தீவட்டிப்பட்டி போலீசார், கடந்த, 10ல் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிந்தனர்.நேற்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணைய துணைத்தலைவர் அண்ணாமலை தலைமையில் குழுவினர், சிறுவன் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். தொடர்ந்து மத்திய ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையை சேர்ந்த ரவிவர்மா தலைமையிலான குழுவினரும் விசாரித்தனர்.