உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விநாயகர் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல்

விநாயகர் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல்

மேட்டூர்: காவிரி ஆற்றில் கரைக்க, விநாயகர் சிலைகளை கொண்டு வந்த வாகனங்களுக்கு, கூடுதல் கட்டணம் வசூலித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சி சார்பில் ஆடி, 18 மற்றும் சதுர்த்தி முடிந்ததும் காவிரி ஆற்றில் கரைக்க சிலைகளை கொண்டு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க, 1.75 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் விடப்பட்டது. இரு நாட்களாக, சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகளை, மேட்டூர் காவிரியாற்றில் கரைக்க பக்தர்கள் வாகனங்களில் கொண்டு வந்தனர். வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு நகராட்சி நுழைவு கட்டணம், 25 ரூபாய் வசூலிக்க வேண்டும். ஒப்பந்தம் எடுத்தவர்கள், 100, 200, 500 ரூபாய் என ரசீதை கொடுத்து, வாகனங்களில் வந்தவர்களிடம் இரு நாட்களாக, 30 மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலித்தனர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். புகாரில், நேற்று மதியம் நகராட்சி வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், ஒப்பந்ததாரரிடம் இருந்து, 300, 200 ரூபாய் ரசீது புத்தகங்களை பறிமுதல் செய்து, கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ