உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உணவு பொருளில் கலப்படம் இருந்தால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை பாயும்

உணவு பொருளில் கலப்படம் இருந்தால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை பாயும்

சேலம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில், இளம் நுகர்வோர்களுக்கு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த புத்தாக்க பயிற்சி நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் கணேஷ்ராம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து விளக்கினார்.தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களில் உள்ள மாற்றங்கள், தகவல் அறியும் உரிமை, கருத்து கேட்கும் உரிமை, வணிக நடைமுறை, முக்கிய விதிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. நுகர்வோர் தனித்தனியாகவோ, கூட்டாகவோ, புகாரளிக்கும் விதிமுறைகள், புகார்களை மின்னணு முறையில் வழங்கும் விதிமுறைகள், பாதுகாப்பு சட்டத்தில் குற்றத்திற்கான தண்டனைகள் வழங்குதல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.இச்சட்டப்படி கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை விற்பது, உற்பத்தி, வினியோகம் உள்ளிட்ட குற்றங்களுக்கு, 6 மாதங்கள் முதல், அதிகபட்சம், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதமாக, 1 லட்சம் முதல், 10 லட்சம் வரை விதிக்க வழி செய்யப்பட்டுள்ளது. அதனால் பயிற்சியில் பங்கேற்றோர், அருகே உள்ள மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.டி.ஆர்.ஓ., ரவிக்குமார், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மோகனசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !