பொது நிதி பணிகளை விரைவாக முடிக்க அறிவுரை
தாரமங்கலம்: தாரமங்கலம் ஒன்றிய குழு கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. பா.ம.க.,வை சேர்ந்த தலைவி சுமதி தலைமை வகித்தார். அதில், தி.மு.க.,வின், துணைத்தலைவர் சீனிவாசன், 'துட்டம்பட்டி ஊராட்சியில் வனிச்சம்பட்டி, செங்கோடனுார் உள்பட, 10 இடங்களில் சேதமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும்' என்றார்.அதற்கு சுமதி, 'கலெக்டர் அலுவலகம், ஒன்றிய நிதியை விடுவித்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.தொடர்ந்து, பதவிக்காலம் குறைந்த நாட்களே உள்ள நிலையில் ஒன்றிய பொது நிதியில் நடக்கும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். பின், 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பி.டி.ஓ., லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.