சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த ஆலோசனை
சேலம், சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம், மேச்சேரி, நாமக்கல், கரூர், வீரராக்கியம், திருப்பூர், கோவை பகுதிகளில் இருந்து, இரும்பு உதிரிபாகங்கள், கொசுவலை, ஜவுளி ரகங்கள், முட்டை, பால் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. வட மாநிலங்களில் இருந்து சிமென்ட், உரம், தானிய வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.இந்நிலையில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த, கோட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் கோட்ட மேலாளர் பன்னாலால் தலைமை வகித்து, சரக்கு போக்குவரத்தில் உள்ள சிக்கல்களை கேட்டறிந்தார். 'செயில்' நிறுவன அதிகாரிகள், தமிழ்நாடு அரசு காகித தொழிற்சாலை அதிகாரிகள், மேட்டூர் தெர்மல், சிஸ்கால் அதிகாரிகள், பல்வேறு தொழில் அதிபர்கள் பங்கேற்றனர்.