தேசிய வாக்காளர் தினத்தில் உறுதிமொழி எடுக்க அறிவுரை
சேலம்: வரும், 25ல், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, சேலம் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தா-தேவி தலைமை வகித்து பேசியதாவது:வரும், 25ல், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலு-வலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில், வாக்காளர் தின உறுதிமொழி எடுக்க வேண்டும். 11 சட்டசபை தொகுதிகளில், 1,269 ஓட்டுச்சா-வடி மையங்களிலும், வாக்காளர் தினத்தை கொண்டாட அதிகா-ரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசு தினத்தில், ஊராட்-சிகளில் கிராம சபை கூட்டத்திலும், வாக்காளர் தின உறுதிமொழி எடுக்க வேண்டும். கடந்த, 6ல் வெளியிடப்பட்ட இறுதி வாக்-காளர் பட்டியலை, மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். ஓட்-டுச்சாவடி மையங்களில், அடிப்படை வசதிகள் தொடர்பாக விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கூடுதல் கலெக்டர் லலித் ஆதித்ய நீலம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.