மேலும் செய்திகள்
போக்சோ வழக்கில் தலைமறைவு வாலிபர் கைது
25-Sep-2025
பனமரத்துப்பட்டி, சேலத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 50. வக்கீலான இவர், அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., ஆதரவாளராக உள்ளார். இவர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை விமர்சித்து, 'டிவி' விவாதங்களில் பேசி வருகிறார்.இவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், கடந்த, 9ல், சத்யசீலன் என்பவர் புகார் அளித்தார். இதனால் வரும், 30 காலை, 11:00 மணிக்கு ஈரோடு கூடுதல் எஸ்.பி., முன் ஆஜராக, மணிகண்டனுக்கு, ஈரோடு போலீசார், 'சம்மன்' அனுப்பினர். இந்நிலையில் ஈரோடு எஸ்.பி.,க்கு, மணிகண்டன் நேற்று, பதிவு அஞ்சலில் அனுப்பிய மனு விபரம்:நான் ஆஜராக வரும்போது, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் என் மீதும் என் வாகனம் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிகிறேன். நேரில் ஆஜராக போலீஸ் பாதுகாப்பு வழங்கினால் விசாரணைக்கு உட்படுகிறேன். பாதுகாப்பு வழங்காதபட்சத்தில், என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழலில் என்னால் ஆஜராக இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, மொபைல் போனில் கொலை மிரட்டல் விடுத்ததாக, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது, சேலம் எஸ்.பி., அலுவலகத்தில், மணிகண்டன் புகார் அளித்திருந்தார்.
25-Sep-2025