உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆத்துார் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட அ.தி.மு.க.,வினர்

ஆத்துார் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட அ.தி.மு.க.,வினர்

ஆத்துார்: மகளிர் சுகாதார வளாகம், இரண்டு ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளதாக கூறி, அ.தி.மு.க.,வினர், நகராட்சி அலுவலகத்தை முற்-றுகையிட்டனர்.ஆத்துார், தட்டாஞ்சாவடி காமாட்சி அம்மன் கோவில் தெரு பகு-தியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி பெண்களுக்காக, சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் தண்ணீர் வசதி போதிய அளவில் இல்லை. பராமரிப்பின்மை காரணமாக, இரண்டு ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளது. நேற்று, அ.தி.மு.க., நகர செயலர் மோகன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட கட்சியினர், வார்டு மக்கள், ஆத்துார் நகராட்சி அலுவலக த்தை முற்றுகையிட்டு, நகரா ட்சி கமிஷனர் சையதுமுஸ்தபா கமாலிடம் மனு அளித்தனர்.இதுகு-றித்து, 15வது வார்டு மக்கள் கூறுகையில், 'இரண்டு ஆண்டுகளாக சுகாதார வளாகம் சீரமைக்கபடவில்லை. வார்டில் அடிப்படை வச-திகள் மேற்கொள்ளாததால், கவுன்சிலரிடம் பலமுறை கூறியும் கண்டுகொள்ளவில்லை. அதனால் கமிஷனரிடம் மனு கொடுத்-துள்ளோம். ஒரு வாரத்தில் தீர்வு காண்பதாக கூறியுள்ளார்,' என்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ