உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எம்.ஜி.ஆர்., சிலைக்கு அ.தி.மு.க.,வினர் மரியாதை

எம்.ஜி.ஆர்., சிலைக்கு அ.தி.மு.க.,வினர் மரியாதை

சேலம்:தமிழக முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நினைவு தினத்தை ஒட்டி, அ.தி.மு.க., சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், அண்ணா பூங்கா மணிமண்டபத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக, 4 ரோட்டில் இருந்து, சேலம் மாநகர் மாவட்ட செயலர் பாலு முன்னிலையில், அமைப்பு செயலர் சிங்காரம் தலைமையில் ஊர்வலமாக வந்து, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்-தினர்.தெற்கு எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், கொள்கை பரப்பு செயலர் வெங்கடாஜலம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்-வராஜ், ரவிச்சந்திரன், சக்திவேல், அவைத்தலைவர் பன்னீர்-செல்வம், பொருளாளர் வெங்கடாஜலம், முன்னாள் மேயர் சவுண்-டப்பன், மாநில நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் ஆத்துாரில் உள்ளஎம்.ஜி.ஆர்., சிலைக்கு, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்-கோவன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்ல-தம்பி, நகர செயலர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தாரமங்கலத்தில், ஓமலுார் எம்.எல்.ஏ., மணி தலைமையில் மவுன ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தினர். பனமரத்துப்பட்-டியில், கிழக்கு ஒன்றிய செயலர் பாலச்சந்திரன், மல்லுாரில், நகர செயலாளர் பழனிவேலு, கொங்கணாபுரத்தில் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் மணி, இடைப்பாடியில் நகர செயலர் முருகன் உள்ளிட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !