உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து ஆத்துாரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து ஆத்துாரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ஆத்துார், ஆத்துார் நகராட்சி அலுவலகம் முன், குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது: ஆத்துாரில், 20 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்களை முடக்கி வைத்தது தான், தி.மு.க.,வின் சாதனையாக உள்ளது. 2026ல், சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும். 2026ல், அ.தி.மு.க., தான் ஆட்சிக்கு வரும்.மதுரை மாநகராட்சி போன்று, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. ஆத்துார் நகராட்சியில், 3.50 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளது. உப்பு ஓடை சாலை ஆறு மாதமாக சீரமைக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால், மக்களுடன் எம்.எல்.ஏ., நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு பேசினார்.எம்.எல்.ஏ.,க்கள் ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை