உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி:ந.ம.மு.க., நிறுவனத்தலைவர் அறிவிப்பு

ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி:ந.ம.மு.க., நிறுவனத்தலைவர் அறிவிப்பு

சேலம்:''ஒத்த கருத்துடைய அரசியல் கட்சியுடன் வரும், 2026 சட்டசபை தேர்தலில், ந.ம.மு.க., கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்,'' என, அதன் நிறுவன தலைவர் ஜெகதாத் மிஸ்ரா தெரிவித்தார்.நமது மக்கள் முன்னேற்ற கழகம் (ந.ம.மு.க.,) சார்பில், சேலம் நேரு கலையரங்கில், பல்வேறு கட்சியினர் இணைப்பு விழா மாநாடு நேற்று நடந்தது. நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமை வகித்தார். அதில், ந.ம.மு.க., சார்பில் தமிழகத்தில் இயந்திரங்கள் மூலம் ஜவுளி உற்பத்தியில், 70 லட்சம் நெசவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு உடனே நெசவாளர் அடையாள அட்டை வழங்குதல்; சேலம், தர்மபுரி விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட, அரசு மாம்பழ கூழ் தயாரிப்பு தொழிற்சாலை அமைத்தல் என்பன உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில இளைஞரணி செயலர் மணி, பொதுச்செயலர் கணேசன், துணை பொதுச்செயலர்கள் செல்வேந்திரன், தமிழ்செல்வன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து ஜெகநாத் மிஸ்ரா அளித்த பேட்டியில், ''நம் கழகத்தின் பிரதான கொள்கை, எதிர்கால சந்ததிக்கு துாய்மை காற்று, நீர், மண் ஆகியவற்றை விட்டுச்செல்வது தான். தமிழகத்தில் விவசாயமும், வியாபாரமும் இரு கண்கள். இந்த பிரதான கொள்கைகளுடன் ஒத்துப்போகும், ஒத்த கருத்துடைய அரசியல் கட்சியுடன், 2026 சட்டசபை தேர்தலில், ந.ம.மு.க., கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை